வாட்ஸ்அப் மூலம் கோவிட் தடுப்பூசி சான்றிதழை டவுன்லோடு செய்வது எப்படி?

கோவிட் – 19 தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி?

STEP 1:

முதலில் +91 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, பிறகு உங்களுடைய வாட்ஸ்அப்பில் இருந்து அந்த எண்ணுக்கு ` Certificate  என்ற மெசேஜ் அனுப்ப வேண்டும். CoWIN இணையதளத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் உங்கள் பதிவு எண், உங்கள் WhatsApp எண்ணாக இருக்க வேண்டும்.

STEP 2:

நீங்கள் செய்தியை அனுப்பியதும், கொரோனா வைரஸ் தொடர்பான தலைப்புகளின் பட்டியலை காண்பிக்கும். அந்தப் பட்டியலில் `சான்றிதழை பதிவிறக்க’ (Download Certificate) என்ற ஆப்ஷனும் இருக்கும். அதற்கு, நாம் ` 2 ‘ என்ற எண்ணை மெசேஜ் அனுப்ப வேண்டும்.

STEP 3:

2 என்ற எண்ணை அனுப்பவதன் மூலம், CoWIN தளத்திலிருந்து உங்கள் தடுப்பூசி சான்றிதழ் கோரப்படும். தொடர்ந்து உங்களுடைய அதிகாரபூர்வ எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதனை உள்ளீடு செய்த பின்னர், CoWIN இயங்குதளத்தில் இருந்து தடுப்பூசி சான்றிதழ் அனுப்பப்படும்.

இதை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.