கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் கோபுரங்கள் மின்னொளி அலங்காரத்தில் மிளிருகின்றன. ஒளிவிளக்குகள் பதித்த நிலையில், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் இரவு நேரத்தில் ஜொலித்து, பக்தர்களை கவரும் அழகில் திகழ்கின்றன.

