மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும், சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு 17-ந்தேதி இரவு 8 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 […]
கலசபாக்கம் தாலுக்கா நட்சத்திரகோவில் தை மாத திருகார்த்திகை விழா!
நமது கலசபாக்கம் தாலுக்கா நட்சத்திர கோவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தை மாத திருகார்த்திகை விழாவில் உற்சவ மூர்த்தி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பக்தர்கள் மொட்டை அடித்தல், காது குத்துதல்,காவடி எடுத்தல் என தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வழிபாடு செய்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
பத்திரப்பதிவின் போது சொத்தானது நீர்நிலையில் இல்லை என்பதற்கான சான்று பெற வேண்டியது அவசியம் – பதிவுத்துறை உத்தரவு!
தமிழகத்தில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் மீது எந்த விதமான பதிவும் மேற்கொள்ளக்கூடாது என பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பத்திரப்பதிவின் போது சொத்தானது நீர்நிலையில் இல்லை என்பதற்கான சான்று அல்லது உறுதிமொழி பெற வேண்டியது அவசியம். எனவே நிலத்தை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு […]
திருவண்ணாமலை மாவட்ட வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்கள்!
திருவண்ணாமலை மாவட்ட வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நகராட்சிகள் தேர்தல் பார்வையாளர்கள் தொலைபேசி எண்கள், • திருவண்ணாமலைதிட்ட இயக்குனர் மகளிர் திட்டம் 9444094360 • வந்தவாசி கூட்டுறவு இணைப் பதிவாளர் 7338749500 • ஆரணி வேளாண் இணை இயக்குனர் 9092843131 • செய்யாறு உதவி இயக்குனர் ஊராட்சிகள் 7402903703 • செங்கம் ஆர்டிஓ திருவண்ணாமலை 9445000420 • சேத்துப்பட்டு ஆர்டிஓ செய்யாறு 9445000419 • கண்ணமங்கலம் கூட்டுறவு […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மொத்த வாக்காளர்கள் விவரம்!
போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை : 1214 வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை – 347 ஆரணி நகராட்சி மொத்த வார்டுகள் எண்ணிக்கை : 33 மொத்த 195 வேட்பு மனுக்களில் 65 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 130 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருவண்ணாமலை நகராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 39 மொத்த 314 வேட்பு மனுக்களில் 43 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 271 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருவத்திபுரம் நகராட்சி வார்டுகள் எண்ணிக்கை : 27 […]
அண்ணாமலையார் ரத சப்தமி தீர்த்தவாரி : செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள திருவிழா கடைகள்!
அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதை ஒட்டி, செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள திருவிழா கடைகள். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி தீர்த்தவாரி: அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர் எழுந்தருளினர்!
இந்த ஆண்டு தை ரதசப்தமியையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் வெகுவிமரிசையாக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் அருணாசலேஸ்வரர், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில் இன்று (06.02.2022) கும்பாபிஷேகம் நடைபெற்றது!
போளூர் அடுத்து படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில் இன்று (06.02.2022) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும்!
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையதுறை தலைவர் தகவல். போட்டி தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் இனி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும்.
நகர்ப்புற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது; வரும் 7ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகம் முழுவதும் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் !
தமிழகம் முழுவதும் 600 மையங்களில் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் 160 மையங்களில் பூஸ்டர் டோஸ் முகாம் செயல்படுகிறது.
படவேடு கும்பாபிஷேக விழா குறித்து அலுவலர்களுடன் ஆட்சியர் பா. முருகேஷ் ஆய்வு !
போளூர் வட்டம், படவேடு கிராமத்தில் உள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருகோவில் படைவீடு கும்பாபிஷேக விழா வருகின்ற 06.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா !
போளூர் அடுத்த அம்மன் கோவில் படைவீடு (படவேடு)அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்ஸ்ரீ உமாமகேஸ்வரி சமேத, ஸ்ரீ சோமநாதீஸ்வர் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிழக்குப்புற ஐந்து நிலை இராஜகோபுர நூதன குடமுழக்குப் பெருவிழா, தை மாதம் 24ஆம் நாள் (06.02.2022) அன்று நடைபெற உள்ளது. [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
ஊருக்கு உணவளிக்கும் விவசாயிகள் அதிகாலையில் நிலங்களை தயார் படுத்தும் காட்சி !
ஊருக்கு உணவளிக்கும் விவசாயிகள் அதிகாலையில் நிலங்களை தயார் படுத்தும் காட்சி. இடம் : போளூர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
தேர்வர்களுக்கு TNPSC முக்கிய அறிவிப்பு !
TNPSC இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என TNPSC அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல பிப்ரவரி 20 ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ பொது பிரிவுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு !
தமிழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வரும் 7ம் தேதி சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும். 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். 16ம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 17ம் தேதி முதல் 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கல்லூரிகளில் சேர்ந்துவிட […]
குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
குரூப்-4 பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை http://tnpsc.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. 100 சதவீத மாணவர்களுக்கு அனுமதி !
40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று (பிப். 1ம் தேதி) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த முறை பள்ளி, கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்களையும் அமர வைத்து பாடங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. ப்ரீகேஜி – எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மற்றும் பிளே ஸ்கூல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு !
10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு. புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம். [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]