கிரிவலத்தின் போது தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அன்னதானம் அளிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அனுமதி ஆணை பெற வேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவுள்ள 3 புகைப்படங்கள், முகவரிக்கான ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு சான்றின் நகல் ஆகியவற்றுடன் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதியை தவிர்த்து 14-ந் தேதி வரை நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
September 19, 2024