டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பு வாட்ஸ்அப் மூலம் பெறலாம்!

வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பு வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்தால் அனுப்பி வைக்கப்படும் என ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி தெரிவித்துள்ளது. பாட நூல்களைப் பெற விரும்புபவர்கள் TNPSC GROUP-IV TEXT BOOKS என்று டைப் செய்து, தங்கள் முழு முகவரியுடன் 9176392791என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பிய முன்பதிவு செய்யவும்.முன்பதிவு செய்த அனைவருக்கும் டிஎன்பிஎஸ்சி பாடநூல்கள் பிடிஎஃப் வடிவில் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.