போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக திருமதி இரா. குமுதா அவர்கள் பதவி உயர்வின் மூலம் நேற்று பொறுப்பேற்றார். கல்வித்துறையில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையை வழங்கிய திருமதி குமுதா, மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தவும், பள்ளியின் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றத்தை எட்டவும் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் புதிய தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
poluronline.com தரப்பிலிருந்தும், திருமதி இரா. குமுதா அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும் அவரது புதுப் பொறுப்பில் சிறந்த வெற்றி காணப் பிரார்த்திக்கிறோம்.