திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் சு. பாஸ்கரன் விழாவை துவக்கி வைத்தார்.
இசை, நடனம், பரதம், ஓவியம், நுண்கலை உள்ளிட்ட போட்டிகளின் நடுவராக ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், தட்சணாமூர்த்தி, ஷெகதாஜ்பேகம், பர்வீனா ஆகியோர் பணியாற்றினர்.
தமிழகத்தின் தொன்மைச் சிறப்பை பறைசாற்றும் வகையில் மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியை சகிலா செய்திருந்தார்.