திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (21.11.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு. பிரியதர்ஷினி, தனித்துணை ஆட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம் திரு வெங்கடேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு. ஆ. சண்முகசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) திரு. குமரன், துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
September 18, 2024