பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போளூரில் “உணவு திருவிழா” சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த திருவிழா ஜனவரி 10 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த விழாவில் பச்சரிசி, சிகப்பு அரிசி, கருப்பு அரிசி உள்ளிட்ட தரமான நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அரிசி வகைகள் பொதுமக்களுக்கு சலுகை விலையில் கிடைக்க உள்ளது.
போளூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் இந்த உணவு திருவிழாவில், அரிசி ரகங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அரிசி வாங்க விரும்பும் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்

