நேற்று இயற்கை உணவு திருவிழாவில் கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையம் மற்றும் போளூர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் போளூர் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் நேற்று ஒரு நாள் இயற்கை உணவு திருவிழா நடந்தது.
பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், நாட்டுச்சக்கரை, நாட்டு மரச்செக்கு எண்ணெய் வகைகள் காய்கறிகள், கீரைகள் பழங்கள் மற்றும் விதைகள் மூலிகைச் செடிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி செய்யப்பட்ட தேன் வகைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் ஏராளமான இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

