- சபரிமலையில் உள்ள பழமையான ஐயப்பன் கோவிலில் நடைபெறும் காத்திகை மாத மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை புகழ்பெற்றவை. இதற்காக இன்று (16.11.2022) மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
- வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
- முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் தற்காலிக முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. http://www.sabarimalaonline.org என்ற இணையதளத்தின் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
- நாளை தொடங்கும் மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திறக்கப்படும் கோயில் நடை, ஜனவரி 20 ஆம் தேதி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக காவலர்கள் 13,000 பேர் 6 கட்டங்களாக பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன. உணவு, மருத்துவம் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
September 10, 2024