ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று 75வது சுதந்திர தினத்தை அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்துமாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது வழிகாட்டுதலுக்கு இணங்க பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து கிளை, துணை தலைமை உள்ளிட்ட அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனைக்காக உள்ளது. இதன் விலை ரூ.25 ஆகும். இதனை கல்வி நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் மொத்தமாக வாங்கி பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திருமதி. அமுதா தெரிவித்துள்ளார்.
September 11, 2024