திருவண்ணாமலை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியீடு : பெண் வாக்காளர்களே அதிகம்!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 27 ஆயிரத்து 340 ஆண்கள், 10 லட்சத்து 74 ஆயிரத்து 89 பெண்கள், 101 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 21,01,530 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 20 லட்சத்து 77 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர். அதன் பின்னர் நடந்த சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் 51 ஆயிரத்து 558 படிவங்கள் பெறப்பட்டு புதிதாக 32 ஆயிரத்து 270 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரி பார்த்து கொள்ளலாம். இந்த வாக்காளர் பட்டியலில் தகுதியுடைய நபர்கள் விடுபட்டு இருப்பின் அதாவது 1.1.2004 வரை பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்க படிவம் 6 சமர்பித்து பெயரை பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.