திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக பதவி வகித்து வந்த பார்த்தசாரதி ராஜபாளையம் நகராட்சி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி கமிஷனராக பணியாற்றி வந்த முருகேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக திரு. முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகரமன்ற பிரதிநிதிகள் வரவேற்றனர்.
September 11, 2024