திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் நேற்று (28. 10. 2022) திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2022 குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. விர். பிரதாப் சிங், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் திரு. அசோக்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. வீ. வெற்றிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
September 11, 2024