திருவண்ணாமலையில் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு தபால் வழியாக நுழைவுச்சீட்டு அனுப்பப்பட மாட்டாது. தேர்வு எழுத தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் நுழைவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. http://drbtvmalai.net என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மண்டல இணை பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
October 4, 2024