திருவண்ணாமலை பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது என்று கலெக்டர் திரு. முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தகுதியானவர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் குறித்து முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி :

திருவண்ணாமலை – deotvm@gmail.com
செய்யாறு – cheyyardeo@gmail.com
ஆரணி – deoarni2018@gmail.com
போளூர் – deopolur@gmail.com
செங்கம் – deochengam@gmail.com

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஜூலை 6 (மாலை 5 மணி வரை)

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.